அச்சன் கோயில் ஆபரண பெட்டி - ஐயப்ப கோஷமிட்டு வழிபட்ட பக்தர்கள்
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;
Update: 2023-12-17 06:51 GMT
அச்சன்கோவில் ஆபரண பெட்டி ஐயப்பன் கோஷமிட்டு வழிபட்ட பக்தர்கள்
புனலூர் அரசுக் கருவூலத்திலிருந்து அச்சன் கோயில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக ஆபரணங்கள் எடுத்துவரப்பட்டு புனலூர் பார்த்தசாரதி ஆலயத்தில் வைத்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக அங்குப் பொதுமக்களின் தரிசனத்திற்குப் பின்பு ஆபரணப் பெட்டிகள் அச்சன் கோயில் ஐயப்பன் கோயிலுக்கும், ஆரியங்காவு ஐயப்பன் கோயிலுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரும் பணி தொடங்கியது. இந்த ஆபரண பெட்டியை ஆரியங்காவு, புளியரை, காலங்கரை, செங்கோட்டை, தென்காசி பன்பொழி வழியாக மேக்கரைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். வழிநெடுகிலும் அச்சன்கோயில் ஆபரண பெட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்ட நிலையில் தென்காசி வந்த ஆபரண பெட்டிக்கு காசிவிஸ்வநதர் கோயில் முன்பு பக்தர்களால் சங்கு முழங்க மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.