உழவர் சந்தையில் அவரைக்காய் விலை சரிவு
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து அவரைக்காய் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையானது.;
Update: 2024-06-06 02:56 GMT
அவரைக்காய்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் அவரைக் காய் சாகுபடி செய்யப்படுகி றது. இதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அவரைக்காய் தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் அவரைக்காய் சாகுபடி வழக்கத்தை விடகுறைந்தது. இதன் காரணமாக அவரைக்காய் விலை தொடர்ந்து 66 ரூபாய்க்கு விற்பனையானது. இதற்கிடையே சமீபத்தில் பெய்த மழை காரணமாக உழவர் சந்தைக்கு அவரைக்காய் வரத்து அதிகரிக்க தொடங்கியது. தர்மபுரி உழவர் சந்தையில் இன்று 1 கிலோ அவரைக்காய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது.