மேட்டூரில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா

சேலம் மாவட்டம்,மேட்டூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்.

Update: 2024-03-20 15:34 GMT

சேலம் மாவட்டம்,மேட்டூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்.


மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் அனல்மின் நிலைய கணக்கு மற்றும் நிர்வாக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனல் மின் நிலைய சிஐடியு தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

இதில் ஓய்வு பெற்ற அனல் மின் நிலைய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை முழுமையாக வழங்க வேண்டும், வருமான வரி ,வீட்டுக் கடன் சான்றிதழ்களை ஏற்காமல் கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை திருப்பி தர வேண்டும், மின்வாரிய பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு வாரிய உத்தரவுப்படி வழங்கப்பட வேண்டிய பாராட்டு சான்றிதழ் மற்றும் மாநாட்டு சான்று மற்றும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி,பாட்டாளி தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.சா போன்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News