கூலி தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் - நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் கல்லூரியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு கூலித் தொழிலாளிகள் தவறி விழுந்து படுகாயம் அடைந்ததை அடுத்து அவரது உறவினர்கள் கல்லூரி முன் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55) மற்றும் அதே ஊரை சேர்ந்த சேகர் வயது 45 ஆகியோர் அதே பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் தற்காலிக ஊழியராக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி கட்டிடத்திற்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2வது தளத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்பு காயம் அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தற்ப்போது . கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 ஆண்டுகள் மேலாக கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து கல்லூரி நுழைவாயில் முன்பு பாதிக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் கல்லூரியின் முன்பு திடீரென தருணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும் பாதிக்கப்பட்டு ஒரு கிளியே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் தற்போது போராட்டத்தை கைவிட்டு கல்லூரி வாசலில் காத்து கிடக்கின்றனர்.