பெண் வழக்கறிஞர்கள் குடும்பத்துடன் ஆட்சியரகம் முன்பு தர்ணா போராட்டம்

தனது தந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண் வழக்கறிஞர் தனது குடும்பத்துடன் ஆட்சியரகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-27 17:28 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்

பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் நல்லு (67). பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் வீட்டிற்கு எதிரே வசிக்கும் சிலர் இவரது ஜாதியை சொல்லி திட்டுவதோடு, நாள்தோறும் எதாவது ஒரு காரணத்தை கூறி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருவத்தூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், பிப்ரவரி 24ம் தேதி நல்லுவை அவரது எதிர் வீட்டில் வசிக்கும் சிலர் தாக்கியுள்ளனர். இது குறித்தும் நல்லு மருவத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தாக்கியதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நல்லு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் எதிர் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மருவத்தூர் போலீசார் நல்லுவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் நல்லு கொடுத்த புகாரின் பேரில் எதிர் தரப்பினர் மீது இதுவரையில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், நல்லுவை தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும்,

இது போன்று பாதிக்கபட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யவும் போலீசாரின் செயல்களை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நல்லுவின் மகள் வழக்கறிஞரான காயத்ரி என்பவர் தனது குடும்பத்தினருடன் பிப்ரவரி 26 ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் சமாதானம் செய்தும் அவர் சமாதானம் அடையவில்லை. ஆட்சியர் வந்து தன்னிடம் நேரில் விவரங்களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News