போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
பாரதிய போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 17:03 GMT
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், போதிய தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் அற்புதராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுவாமி, செந்தில்குமார், நடேசன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.