நூற்பாலை தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளி தன்னை பணி நீக்கம் செய்ததாகக் கூறி, குடும்பத்துடன் தர்ணா போராட்டம் செய்தார்.

Update: 2024-03-02 14:54 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளி தன்னை ஆளை நிர்வாகம் இன்று முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கிஷோத் குமார் என்று நிரந்தர பணியாளர் என்பவர் வழக்கம் போல் இன்று பணிக்கு வந்த நிலையில் ஆளை நிர்வாகம் முன் அறிவிப்பு ஏதுமின்றி தன்னை பணி நீக்கம் செய்ததாக கூறி நூற்பாலை நுழைவாயில் முன்பு தனது மனைவி மற்றும் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் கூறும்போது இதே நூற்பாலையில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து கொண்டிருந்த அவரது தந்தை ராஜா என்பவர் பனிக்காலத்தில் உயிரிழந்ததாகவும் அவருக்கு வழங்க வேண்டிய பணி கொடைத்தொகை எட்டு ஆண்டுகள் ஆகியும் இது நாள் வரையிலும் ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை என்றும் கூறினார் தற்போது அவரை பணி நீக்கம் செய்துள்ள நிலையில் அவரது தந்தைக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை தொகையும் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி தனது மனைவி கை குழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் தற்போது ஆளை நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

Tags:    

Similar News