அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு `டைமண்ட்' அங்கீகாரம் !
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு டைமண்ட் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 06:36 GMT
‘ஆர்' என்ற சர்வதேச நிறுவனமானது ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து தரவரிசை அடிப்படையில் அங்கீகரிக்கும் அரசுசாரா நிறுவனமாகும். இந்த நிறுவனம் நடப்பாண்டிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு கற்றல் இலக்கு அடிப்படையில் சிறந்து விளங்கும் கல்லூரிகளை அங்கீகரித்துள்ளது. இதில் விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு டைமண்ட் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரம் பெற சிறந்த பங்களிப்பாற்றிய துறையின் டீன் செந்தில்குமாரை பல்கலைக்கழக வேந்தர் கணேசன், அனுராதா கணேசன், துறை பேராசிரியர்கள் வாழ்த்தி பாராட்டுகளை தெரிவத்தனர். இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு தங்களின் துறை சார்ந்த திறனை மட்டும் மேம்படுத்துவதால் அவர்களின் வருங்கால வளர்ச்சியினை ஈடு செய்ய முடியாது. துறையுடன் தொடர்புடைய அனைத்து இதர பிரிவுகளிலும் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகையை கல்லூரிகளில் நடைமுறைபடுத்தி வரும் கற்றல் இலக்கு சார்ந்த செயல்பாடுகளை மையப்படுத்தி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வருங்கால வளர்ச்சிக்கு ஈடாக தங்களின் திறனை வெளிபடுத்தி சிறந்த எதிர்காலத்தை பெற முடியும் என்றார்.