டீசல் திருட்டு - 4 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான டீசல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ;

Update: 2024-05-27 01:35 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் அன்புராஜா (40),  இவர் கீழநத்தம் பகுதி அமைந்துள்ள  தனியார் கிராவல் குவாரியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் குவாரிக்கு வந்த மர்ம கும்பல், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20000 மதிப்புள்ள டீசலை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து விக்கிரமங்கலம் போலீசில் அன்புராஜா கொடுத்த புகாரின் பேரில், டீசல் திருட்டு மர்மகும்பலை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதனிடைய  போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில்  டீசலை எடுத்து வந்த நான்கு பேரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள்  முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விக்ரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இதில் கீழநத்தம் குவாரியில் டீசல் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் சாலையில் ஒதுக்குப்புறமாக நிற்கின்ற வாகனங்களில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் திருடுவதை அவர்கள் தொழிலாக ஈடுபட்டதும் தெரியவந்தது.  இதையடுத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அணைக்குடியை சேர்ந்த செல்வமணி, தட்டுமால் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய், ஸ்ரீபுரந்தானை சேர்ந்த சத்தியமூர்த்தி, இடையாரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News