பாதையை கடப்பதில் சிரமம்

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்காக வடிகால் வாய்கால் தூர்க்கப்பட்டதால், மழைநீர் வடிய வழியின்றி பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லும் அவலம்.

Update: 2024-01-18 14:01 GMT

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்காக வடிகால் வாய்கால் தூர்க்கப்பட்டதால், மழைநீர் வடிய வழியின்றி பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லும் அவலம்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான கட்டிடம் ரூபாய் 114 கோடி மதிப்பீட்டில் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த கன்னிதோப்பு பகுதிக்கு செல்லும் சாலை அகற்றப்பட்டு புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் பக்கவாட்டில் புதிதாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செம்மண்சாலை அமைத்து தரப்பட்டது.

கன்னிதோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் பருவமழையால் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் உள்ள குளமும் சாலையும் ஓரே மட்டத்தில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மெயின்ரோடு செல்வதற்கு 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. தண்ணீரை வடிய வைப்பதற்காக தற்காலிக சாலையை துண்டித்து தண்ணீர் வடியவைக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் வடிகால் வாய்க்காலை தூர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான காம்பவுன்ட் சுவர் அமைக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் வடிந்து வரும் மழைநீர் வடிய வழியின்ற தங்கள் பகுதி தண்ணீரால் சூழப்பட்டு 1 மாதமாக அவதியடைந்து வருவதாக அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக தண்ணீர் வடிவதற்கான வாய்க்கால் ஏற்படுத்தி புதிய தார்சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுதுள்ளனர்.,

Tags:    

Similar News