மாரியம்மன் கோவிலில் விஸ்வகர்மா மண்டபடி விழா

மஞ்சள் நீர் மண்டகப்படி விழாவில் அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்தியங்கள் நடைபெற்றன.

Update: 2024-02-26 18:50 GMT

திண்டுக்கல் மாரியம்மன் கோவில் விழா

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவையொட்டி பக்தர்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், வழிபாடுகள் செய்து வருகின்றனர். மண்டகப்படிதாரர்கள் சார்பாக அம்மன் வீதி உலா, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து விஸ்வகர்ம மகா ஜன சபா சார்பாக மஞ்சள் நீர் மண்டகப்படி நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்தியங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர்.  தொடர்ந்து அம்மனை அழைத்து 4 ரத வீதி வழியாக கோவிலை வந்தந்தது. பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ஏற்பாடு நடைபெற்றது. 

Tags:    

Similar News