திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்தி கோரிக்கை
திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தத்திடம் மனு அளித்தனர்.
Update: 2024-06-24 09:16 GMT
வத்தலக்குண்டு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கலந்து கொண்டு, வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசினார். இக்கூட்டத்தில் விசிக சார்பில், திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்தவும், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த உதவிட வேண்டுமென்றும், வத்தலக்குண்டுவின் முக்கிய சாலை சந்திப்பான உசிலம்பட்டி பிரிவிலும், பெத்தானியபுரம் அருகே பிரபல தனியார் மருத்துவமனை அருகிலும் உயர் ஹைமஸ் விளக்குகள் அமைக்க வேண்டியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.