திண்டுக்கல் : அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி

வேடசந்தூரில் வேளாண்மை துறையின்கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-10-27 14:58 GMT

அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்குப் பயிற்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேடசந்தூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி மாரம்பாடி ஆரோக்கியம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராமசாமி. அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் உதயகுமார் செய்திருந்தார். இப்பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News