பொன்னமராவதியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2024-06-08 09:35 GMT

பொன்னமராவதியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை

பொன்னமராவதி தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வலையபட்டி அடைக்கன் ஊருணியில் நடைபெற்ற ஒத்திகைக்கு பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

இதில், பேரிடர் காலங்கள் மற்றும் இயற்கை இடர்பாடு காலங்களில் பொதுமக்கள் சிக்கித் தவித்தா எவ்வாறு காப்பாற்றுவது என செயல்விளக்கமாக தீயணைப்புத் துறை வீரர்கள் செய்து காண்பித்தனர். மேலும், தீவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

Tags:    

Similar News