பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், பேரிடர் காலங்களில், மாணவ - மாணவியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Update: 2024-06-28 07:09 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், பேரிடர் காலங்களில், மாணவ - மாணவியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அரக்கோணம்,தேசிய பேரிடர் மீட்பு படை குழு கமாண்டர் ஆசிஷ் குமார் சிங், சீனியர் காமாண்டர் அகிலஷ் குமார் குழுவினர், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், எவ்வாறு தன்னையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், முதலுதவி அளித்தல், பேரிடரிலிருந்து பாதுகாப்பாக நடந்துகொள்ள வழிமுறைகளை செயல்முறையுடன் கூடிய விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி நிறுவனர் பா.போஸ் அவர்கள் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன் வரவேற்றார்.
Tags:    

Similar News