பண்ருட்டியில் தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கல்

பண்ருட்டியில் தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கலப்பட்டது.

Update: 2024-01-05 10:49 GMT

தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் சிங்காரவேலன் என்பவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் இறந்து விட்டார்.

இறந்துபோன சிங்காரவேலன் என்பவருக்கு இந்துமதி வயது 32 என்ற மனைவியும், தர்ஷன் என்ற மகனும் வயது 9, கனிஷ்கா 6 என்ற மகளும் உள்ளனர். கடலூர் மாவட்ட காவல்துறை ABC நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப் மூலம் இணைந்து மறைந்த சிங்காரவேலன் குடும்பத்தாருக்கு உதவி செய்யும் நோக்கில் நிதி திரட்ட முடிவு மேற்கொண்டு காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரை வாட்ஸ்அப் மூலம் உதவி கோரியதின்பேரில் காவல்துறையினர் தங்களாகவே முன்வந்து நிதி வழங்கினர்.

ரூபாய் 3. 5 லட்சம் நிதி வழங்கினார்கள். திரட்டிய நிதியை C. N. பாளையம் சிங்காரவேலன் இல்லத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில், காவல்துறையினர் நேரில் சென்று ரூபாய் 3. 5 லட்சம் பணத்தை நேரில் வழங்கியும், மரக்கன்று நட்டு ஆறுதல் கூறினார்கள்.

பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, காவல் ஆய்வாளர்கள் ராஜதாமரைபாண்டியன், கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன், கிராம முக்கியஸ்தர்கள் வைத்திலிங்கம், ராஜேந்திரன், ரத்தினசாமி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், தனிப்பிரிவு காவலர் நந்தகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News