சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட வந்த குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

நிலத்தடி நீர் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் இணைப்பை துண்டித்தனர்.

Update: 2024-05-21 12:18 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது.  காவிரி ஆற்றங்கரையோரம் ஏராளமான விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர்,மற்றும் விவசாய தேவைக்காக  காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி வரும் நிலையில்  காவிரியில் தற்பொழுது நீர்வரத்து குறைந்த நிலையில்  ஆற்று கரையோர பகுதி உள்ள   களியனூர் கிராமத்தில், விவசாயத்திற்கு நீரை பயன்படுத்துவதாக கூறி,நில உரிமையாளர்கள் சிலர்   ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலமாக  நிலத்தடி  நீரை தினசரி டேங்கர் லாரிகளில் எடுத்து, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கல்லூரிகள், வணிக, வர்த்தக , நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் , நீர்வளத் துறை நீர் நிலை கோட்ட சேலம் செயற்பொறியாளர் தலைமையில், குமாரபாளையம் வட்டாட்சியர் சண்முகவேல், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் களியனுர் கிராமத்தில் சங்கர், சிவசுப்பிரமணி, தெய்வ சிகாமணி, பூபதி, சம்பூரணம், உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை விற்பனைக்கு பயன்படுத்தி வந்ததை கண்டறிந்து, ஆழ்துளை கிணற்றின் குடிநீர் குழாய் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்து சீல் வைத்தனர்.

சமய சங்கிலி மற்றும் கலியனூர் கிராமங்களில்  மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் இணைப்பு குழாய் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளில் திடீர் நடவடிக்கைகளால் குடிநீர் விற்பனை செய்யும் நபர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் காவிரி ஆற்றில் விவசாயத்திற்காக நீர் எடுக்க அனுமதி பெற்று நீரை தினமும் லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வது குறித்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News