வரி செலுத்தாத கல்லூரியின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நாகர்கோவிலில் வரி செலுத்தாத கல்லூரியின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு. பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-02-14 09:36 GMT

வரி செலுத்தாத கல்லூரியின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களுக்கான வாடகை பாக்கி வைத்து இருப்பவர்களிடம் வசூல் செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆட்டோ, கார்களில் ஒலிபரப்பு மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. மேலும் மாநகராட்சியில் கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்கள் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் வரி செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. என்றாலும் பல தனி நபர்கள் நிறுவனங்கள் வரிபாக்கியை செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இது போன்றவர்கள் மீது மாநகராட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு கல்லூரி கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபாய் 10.62 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது. எனவே மாநகராட்சி கமிஷனர் ஆனந்தமோகன் உத்தரவுன்படி உதவி கமிஷணர் பாலசுந்தரம் மேற்பாவில் வருவாய் ஆய்வாளர் சுப்பையன், வரி வசூலிப்பாளர் அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கல்லூரியின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதற்குப் பிறகும் வரி பாக்கி செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இது போல் வரி பாக்கி வைத்துள்ள அனைத்து நிறுவனங்கள், தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News