மயிலாடும்பாறையில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

மயிலாடும்பாறை பால் வண்ணநாதர் கோவிலில் இருந்த 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

Update: 2024-07-01 02:50 GMT

கல்வெட்டு 

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செல்வம் மன்னவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பழனி முருகன் ஆகியோர் மயிலாடும்பாறை பால் வண்ண நாதர் கோவிலில் இருந்த 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்தனர் அந்த கல்வெட்டில் மயிலாடும்பாறை ஊரின் பழைய பெயர் ஓரோமில் என்றும், அங்குள்ள இறைவனின் பெயர் ஓரோமிஸ்வரம் உடைய நாயனார் என்பதையும் அறிய முடிகிறது என அவர்கள் கூறினர்
Tags:    

Similar News