கீழடியில் சுடுமண் பானை ஓடுகள் கண்டெடுப்பு

கீழடியில் நடைபெற்று வரும் 10ம் கட்ட அகழாய்வில் மீன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு சுடுமண் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

Update: 2024-07-04 03:31 GMT

மீன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் பானை ஓடுகள் 

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது, இதில் தற்போது வரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் முதல் குழியல் அகழ்வாய்வு மேற்கொண்ட போது 58 சென்டிமீட்டர் ஆழம் மற்றும் 96 சென்டிமீட்டர் ஆழத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மீன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு சுடுமண் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகையிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Tags:    

Similar News