ஊத்தங்கடையில் இருந்து 7டன் உணவுபொருட்கள் அனுப்பி வைப்பு
ஊத்தங்கடையில் மிக்ஜாம் புயல் நிவாரணம் 7 டன் உணவுபொருட்கள் வசூல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி, நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து ஊத்தங்கரை பகுதியில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஊத்தங்கரை பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று அவர்களால் இயன்ற உதவியினை அளிக்க கூறினார்கள் மனம் உயர்ந்து மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனர்
இதில் அதிக அளவில் அரிசி மற்றும் பணம் உள்ளிட்ட உதவிகளை பொதுமக்கள் செய்தனர் இந்த நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலை ராஜன் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் பொதுமக்களிடம் வசூல் செய்த சுமார் 3 இலட்சம் மதிப்பீட்டிலான 7 டன் உணவு பொட்டலங்களை வாகனத்தில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்
இந்த உணவு பொருட்கள் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் புயலால் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்று வழங்கப்படும்.