கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வியாபாரப் போட்டியால் தகராறு

கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வியாபாரப் போட்டியால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

Update: 2024-06-03 15:41 GMT

கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வியாபாரப் போட்டியால் தகராறு. ஒருவர் மீது வழக்கு பதிவு. திருச்சி மாவட்டம், முசிறி, துறையூர் பைபாஸ் ரோட்டை சேர்ந்த தங்கவேல் மகன் அருண்குமார் வயது 30. இவர் கரூர் பேருந்து நிலைய பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவடியன் கோவில் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் வடிவேல் வயது 43 என்பவர் மீன் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி மாலை 6 மணி அளவில், அருண்குமார் அவரது கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வடிவேல், அருண்குமாரை தகாத வார்த்தை பேசி, தகராறு செய்து உள்ளார். மேலும், அருண்குமாரை கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அருண்குமார், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் உள் காயம் ஏற்பட்டதாக கூறி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடிவேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமார் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வடிவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News