மாமியார் கடையில் தகராறு - மருமகள் மீது வழக்கு

மயிலாடுதுறையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் நிலையில் கடையில் தகராறு செய்த மருமகள் மீது மாமியார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-02-05 05:25 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் கல்வெட்டு மற்றும் பொருள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருபவர் சக்கரவர்த்தி மனைவி இந்திராணி(75). இவருக்கும் இவரது மருமகள் ராஜேஸ்வரிக்கும் சொத்து தகராறு குறித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது கடையில் புகுந்து சில பொருட்களை திருடியுள்ளனர். எதிர்த்து கேட்ட இந்திராணியை கொலை மிரட்டல் விடுத்துபேசியுதாககூறப்படுகிறது.  இது குறித்து இந்திராணி மயிலாடுதுறை காவல்நிலையத்தில்  மருமகள் ராஜேஸ்வரி மற்றும் வெங்கட்ராமன், சதீஷ் மேலும் பலர்சேர்ந்து கொண்டு இச்செயலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று வழக்கு நிலுவையில் உள்ள கடையில் பூட்டுகளை திறக்க விடாமல் ஃபெவிகுவிக்ஸ் போட்டு பூட்டுகளை சேதப்படுத்தியதாக ராஜேஸ்வரியின் கணவரின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் மீது அளித்த புகாரின்பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News