ரத்த தானம் செய்வோம் அமைப்பு மூலமாக போர்வை வழங்கல்

ரத்த தானம் செய்வோம் அமைப்பு மூலமாக போர்வை வழங்கப்பட்டது.

Update: 2023-10-30 08:12 GMT

போர்வை வழங்கப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு சார்பில் ரத்த தானம் செய்வோம் அமைப்பு மூலமாக தியாகதுருகம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் படுத்து உறங்கும் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் 40 பேர்களுக்கு நேற்றிரவு போர்வைகள் வழங்கப்பட்டது. ரத்த தானம் செய்வோம் அமைப்பின் மாநில தலைவர் ஷேக் சலாவுதீன் தலைமையில் மாநில நிர்வாகிகள் அஜித்குமார், இப்ராஹிம்ஷா, யாசின், அப்துல்ரகுமான், டேவிட்பாலு, ஸ்ரீதர்,பாலமுருகன், கோபி, மணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News