தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
தமிழக வெற்றி கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி சார்பாக தலைவர் நாராயணன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
அன்னதானம் வழங்கப்படுகிறது
இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் கழகத் தலைவர் விஜய் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர் அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மெயின் பஜாரில் வைத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவின்படியும்,
கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல் படியும் விருதுநகர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் நாராயணன் தலைமையில், விருதுநகர் மெயின் பஜாரில் வைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த அன்னதான இது சும்மா 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் இந்த நிகழ்வின் போதுவிருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்