மானிய விலையில் தாவரக் கன்றுகள் விநியோகம்!

மானிய விலையில் தாவரக் கன்றுகள் விநியோகம்.

Update: 2024-06-01 06:41 GMT

தாவரக் கன்றுகள் விநியோகம்

குடுமியான்மலை அண்ணா பண்ணையில் முதல்வரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களான ஆடாதோடா, நொச்சி போன்ற தாவர நடவு பொருட்களை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தாவர கன்றுகளை பாலித்தீன் பைகள் மூலம் நாற்றங்கால் உற்பத்தி செய்திடும் பணி நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் நடப்பாண்டு முதல்வரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் இயற்கை பூச்சி விரட்டி பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வந்து விவசாயிகளை விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை குறைத்திடமும் சுற்றுப்புற சூழலை பாதுகாத்திடவும் ஆடாதோடா, நொச்சி போன்ற உயிரிப் பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பண்ணையில் 55 ஆயிரம் கண்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது திட்டத்தின் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 நடவு கன்றுகள் மட்டும் வழங்கப்படும். சிறு, குறு மற்றும் மகளிர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மானிய விலையில் வழங்கப்படும். ஆடாதோடா, நொச்சி போன்ற தாவரக் கன்றுகளை தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்து பரவலாக்கம் செய்து இதனை சிறந்த பூச்சி விரட்டியாக வயல்களிலும் தானிய சேமிப்பு கிடங்குகளிலும் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News