தேர்தல் நாள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற பைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மருத்துவர் ச.உமா, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் நாள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற பைகளை வழங்கினார்.

Update: 2024-04-17 10:25 GMT

தேர்தல் நாள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற பைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, புதிய தினசரி சந்தையில் இன்று மாவட்ட ஆட்சியர் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர், முன்னிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் நாளை அறிவுறுத்தும் விதமாக பைகளில் தேர்தல் நாள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற பை மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 –ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு நகராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட தினசரி சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் நாளை (19.4.2024) அறிவுறுத்தும் விதமாகவும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விழிப்புணர்வு நிகழ்வாகவும் பைகளில் தேர்தல் நாள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற பையினை வழங்கினார்.

தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சே.சுகந்தி (திருச்செங்கோடு), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News