தருமபுரியில் மாற்றுத்திறனாளிக்கு நிதி உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.02.2024) மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையான ரூ.1.00 இலட்சத்தை நிதியுதவியாக ஒதுக்கி, அடுக்குமாடி குடியிருப்புக்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப. வழங்கினார்கள்.
உடன் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை பொறியாளர் திரு.சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.