திண்டுக்கல்லில் மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம்

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான தொடர் போட்டிகள் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமையில் துவங்கியது.

Update: 2024-02-12 06:45 GMT

போட்டி தொடங்கி வைப்பு

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தொடர் போட்டிகள் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமையில் துவங்கியது.

தலைமை ஆசிரியர் பாதிரியார் ஆரோக்கியதாஸ், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மே மாதம் வரை நடைபெறும் தொடர் விளையாட்டில் ஒரு பிரிவில் 8 அணிகள் வீதம் 5 டிவிசன்களில் பிரிமியர், முதல், 2, 3, 4ம் பிரிவில் 40 அணிகள் பங்கேற்கிறது.

Tags:    

Similar News