மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஒளிப்பதிவாளர்கள், போட்டோகிராபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-03 13:06 GMT

சிவகங்கை மாவட்ட ஒளிப்பதிவாளர்கள், போட்டோகிராபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தேவகோட்டையில் சிவகங்கை மாவட்ட ஒளிப்பதிவாளர்கள், போட்டோகிராபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.

தேவகோட்டை கிளை செயலாளர் பெரியசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். டிஎஸ்பி பார்த்திபன், எம்எல்ஏ செந்தில்நாதன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், சங்க மாநில தலைவர் சிவக்குமார், முன்னாள் மாநில தலைவர் பிரெம்லால், மாநில செயலாளர் ஸ்ரீதரன் உட்பட மாநில மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறிய புகைப்பட கலைஞர்கள் நல வாரியம் உடனடியாக அமைத்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

Tags:    

Similar News