குமரி அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-03-17 12:37 GMT
நாகர்கோவில் கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவது குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து பேசியதாவது, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

பிற அரசியல் கட்சிகளின் கொள்கைகள், திட்டம், கடந்த கால சாதனைகள் மற்றும் பணிகளை மட்டுமே விமர்சித்தல் வேண்டும். மேலும் அமைதியான மற்றும் குழப்பமில்லாத குடும்ப வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு நபரின் உரிமையும் பிரசாரத்தின் போது முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். ஊர்வலத்தின் வழிப்பாதை போக்குவரத்திற்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும். தேர்தலை நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசு அலுவலர்களுக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என கூறினார்.

முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டண பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.என்.ஸ்ரீதர், வெளியிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா, உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) அன்சுல் நாகர், இ.கா.ப., வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், மாவட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட துறை சாரந்த அலவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News