மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி தலைமையில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின்கீழ், 3-வது மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் இன்று (20.01.2024) நடைபெற்றது.
உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.மணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், துணை இயக்குநர் கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), வி.ராமசாமி (அன்னவாசல்), நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.