மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித மேரி பப்ளிக் பள்ளியில் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-31 05:29 GMT

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித மேரி பப்ளிக் பள்ளியில் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, கடந்த 27, 28ம் தேதிகளில் நடந்தது. 32 கால்பந்து அணிகள் பங்கேற்றன. 13 வயதுக்கு கீழ் 12 அணிகளும், 14 வயது மேல் 20 அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் சேலம் கிளேஸ் புரூக் மற்றும் புனித ஜான் நேஷனல் அகாடமி பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன. அந்த அணிகளுக்கு புனித மேரி பப்ளிக் பள்ளி முதல்வர் ஜெரால்டின் மேரி சுழல் கோப்பையை வழங்கினார். முதல் பரிசாக ₹5ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை ரெஜீஸ் ஜெகநாதன் வழங்கி பாராட்டினார்.  2ம் இடம் பெற்ற மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி அணிக்கு ₹3 ஆயிரம்பரிசை பிரான்சிஸ் வழங்கினார். பெண்கள் பிரிவில் கோவைபிரைடு அகாடமி முதல் இடத்தைபிடித்தது. பரிசு தொகை சான்றிதழை ரமேஷ் வழங்கினார். 2, 3ம் இடத்தை நெய்வேலி ஏ,பி அணிகள் பெற்றது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் அருளப்பன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் பீமா ராவ் செய்திருந்தார்.
Tags:    

Similar News