KSR கல்வி நிறுவனத்தில் மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள்!
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பாக செப்டம்பர் 04, 05 - 2024 (புதன்,வியாழன்) ஆகிய நாட்களில் 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான நாமக்கல் மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் திருச்செங்கோடு
கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை KSR கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் வெற்றி பெற்று தகுதி பெறுபவர்கள் மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளுக்கு நாமக்கல் தடகள அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
போட்டிகள் 20 வயதிற்குட்பட்டோர் - (12.11.2004 & 11.11.2006) 18 வயதிற்குட்பட்டோர்-(12.11.2006 & 11.11.2008) 16வயதிற்குட்பட்டோர் (12.11.2008 & 11.11.2010) 14 வயதிற்குட்பட்டோர் - (12.11.2010 & 11.11.2012) என நான்கு பிரிவுகளில் நடைபெற உள்ளது.
போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:
1. நுழைவுக் கட்டணம் ஒரு போட்டியாளர் ரூ.200/- செலுத்த வேண்டும்.
2. அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுழைவுக் கட்டணம் ரூ. 100/-செலுத்த வேண்டும்.
3. கல்லூரி அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதாவதொன்று அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
4. ஒரு போட்டியாளர் 2 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் (Relay) தவிர்த்த.
காலை
5. போட்டியளர் உரிய சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
6. அனைத்து பள்ளி, கல்லூரி அணிகளும் தங்களுடைய கல்வி நிறுவனங்களின் கொடியுடன் 04.09.2024 புதன்கிழமையன்று 9.00 மணிக்கு அணிவகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அணி வகுப்பில் கலந்துகொள்ளாத கல்லூரிகள் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
7. போட்டியாளர் எண் (BIB Number) 03.09.2024 செவ்வாயன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திருச்செங்கோடு KSR கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும்.
8. Entry இணைப்பில் உள்ள Excel Formatஇல் மட்டுமே namakkalentry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். Spot Entry இல்லை. Entry கையில் எழுதியோ, WordFormatஇல் அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படாது.
9. U-18, வயதிற்குட்பட்டவர்கள் Track Eventஇல் 200 மீட்டருக்கு மேல் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
10. Entry Last Date : 28.08.2024, 5:00 PM இதன்பிறகு Entry கொடுக்கும் அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் ரூ.300
தொடர்புக்கு:
1. A. கார்த்திக்
9444879213
2. S. கார்த்திகேயன்
8610123646
3. R. கார்த்திக்
9942125252