மாவட்ட ஊராட்சி செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு தலைவரிடம் வாழ்த்து
பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி செயலாளராக பதவி ஏற்ற சந்திரா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
Update: 2024-02-08 01:39 GMT
வாழ்த்து
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சந்திரா, பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்து அரசு அறிவித்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி செயலராக பதவியேற்றார், பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான, குன்னம் இராஜேந்திரனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார், அவரது பணி சிறக்க தனது வாழ்த்துக்கள் ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் தெரிவித்து கொண்டார். நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.