டெங்கு, மலேரியா கட்டுப்படுத்த மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க வேண்டும் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Update: 2023-12-11 12:48 GMT

சேலம் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலத்தில் நடைபெற்றது. தலைவர் ரேவதி ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை புதுப்பித்து பொது மக்கள் எளிதாக சிகிச்சை பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் . மாவட்டம் முழுவதும் டெங்கு, மலேரியா கொசு பரவுவதை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்து சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.மாநகராட்சி, நகராட்சிகளில் தலைவர்கள், கவுன்சிலர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இதேபோல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கும்,கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து மேட்டூர் அருகே உள்ள கோனூர் உபரி நீர் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News