பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற மாவட்ட எஸ்பி
அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்பி பங்கேற்றார்.;
Update: 2024-01-25 00:39 GMT
அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்பி பங்கேற்றார்.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற முகாமில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் கலந்து கொண்டு 12 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல் தரப்பட்டது. இதில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.