சரக அளவிலான பூப்பந்து போட்டி: அரசு பள்ளி சாதனை

சரக அளவிலான பூப்பந்து போட்டியில் அரசு பள்ளி சாதனை படைத்துள்ளது.

Update: 2023-10-26 13:59 GMT

அரூர் அரசு பள்ளி மாணவர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரூர் சரக அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி சந்தப்பட்டி பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து 15ஆணாடுகளாக பூப்பந்து போட்டியில் சரக அளவில் வெற்றிப் பெற்று மாவட்ட மாநில அளவில் சாதனை செய்துள்ளனர். இந்த கல்வியாண்டில் சந்தப்பட்டி அரசு பள்ளி சார்பில் இளையோர் மற்றும் மூத்தோர் மாணவர்களுக்கான பூப்பந்து போட்டியில் கலந்து கொண்டு மாணவர்கள் இரு பிரிவுகளிலும் மாணவிகள் இளையோர் பிரிவில் சரக அளவில் முதலிடம் பிடித்தனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று மாணவர்கள் இரு பிரிவுகளிலும் மூன்றாம் இடம் பிடித்தனர். கடற்கரை கையுந்து பந்து போட்டியில் இளையோர் பிரிவில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்தனர். கிராம புறங்களில் இருந்த பங்கு பெற்று சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களையும் உடற்கல்வி ஆசிரியர் அ. வேடியப்பன் அவர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் .ஆர். வாசு மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். .

Tags:    

Similar News