நெல்லையில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

பாளையங்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-18 05:08 GMT

ஆலோசனை கூட்டம் 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை ரஹ்மத்நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். செல்வகுமார்,சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி துணை செயலாளர் பிரியா சிறப்புரையாற்றினார். இதில் மக்களவை தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News