தேமுதிக கழக கொடி நாள் கொடியேற்று விழா
தேமுதிக கழக கொடி நாள் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது;
By : King 24x7 Website
Update: 2024-02-12 06:48 GMT
தேமுதிக கழக கொடி நாள் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது
தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் தேமுதிக கழக கொடி நாள் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்செங்கோடு நகர தேமுதிக சார்பில் ராஜ கவுண்டம்பாளையம், பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வார்டு செயலாளர் மோகன்ராஜ் வரவேற்று பேசினார், திருச்செங்கோடு நகரக் கழக செயலாளர் குணசேகரன் தலைமையில், மாவட்ட கழகச செயலாளர் விஜய்சரவணன் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார், கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் முனியப்பன், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் சரவணகுமார், திருச்செங்கோடு நகர நிர்வாகிகள் ரத்தினம், கார்த்தி, பழனிச்சாமி, ராஜா, வார்டு நிர்வாகிகள் ஜீவானந்தம், கண்ணன், குப்புசாமி, அரசு, பழனியப்பன், சந்திரன், கார்த்தி, புஷ்பநாதன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.