தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுக வேட்பாளர் சந்திர மேகனுக்கு ஆதரவாக பிரச்சாரம்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திர மேகனுக்கு, ஆதரவாக, பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
Update: 2024-04-02 04:53 GMT
பெரம்பலூர் நகர் சங்கு, பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரமோகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார், அப்போது அவர் பேசும் போது, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் ஏதும் செய்யவில்லை நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை, விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை, வேலைவாய்ப்பு தரவில்லை மாறாக கஞ்சா விற்பனையும் டாஸ்மாக் மது விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது என தெரிவித்தவர், கடந்த ஐந்தாண்டுகளில் பெரம்பலூர் எம்பி ஆக இருந்தவர் தொகுதி பக்கமே வராமல் மக்களை ஏதும் சந்திக்காமல் இருந்து வந்தவர் மீண்டும் போட்டியிடுகிறார் எப்படி அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என கேள்வி எழுப்பினார், ஆகவே பெரம்பலூருக்கு உண்டான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவதற்கு அதிமுக வேட்பாளர் சந்திரமகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை இரா தமிழ்செல்வன் மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர் துரை சிவா ஐயப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளான, உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.