ரூ.5000 கோடி நிதியை உடனே வழங்க திமுக விவசாய தொழிலாளர் அணி கோரிக்கை

Update: 2023-12-10 08:09 GMT

 திமுக விவசாய தொழிலாளர் அணி கூட்டம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் சீர்காழி தியாக. விஜயேஸ்வரன் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திருமணஞ்சேரி மனோகரன் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன்* கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன் , கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, உடனடியாக, தமிழ்நாடு அரசு கோரியுள்ள , ரூபாய் 5000 கோடியை, ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணிகளில் உள்ள குளறுபடிகளை நீக்கி, விவசாய தொழிலாளர்களின் சம்பளத்தை, நாள் ஒன்றுக்கு ரூபாய் 300 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் ,பெருந்திரளாக பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News