தர்மபுரியில் திமுக வேட்பாளர் முன்னிலை

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட இலுபறிக்கு பின்பு பாமக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2024-06-04 11:49 GMT

திமுக வேட்பாளர்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு என்னும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியே ஆறு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் 14 மேசைகள் அமைக்கப் பட்டுள்ளன. குறைந்த பட்சம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 20 சுற்றுகளாகவும், 

அதிகபட்சம் பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தருமபுரி தொகுதியில் 13-வது சுற்ற்றில், திமுக வேட்பாளர் ஆ மணி 260026 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.அதிமுக வேட்பாளர் அசோகன் 177748 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 249604 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி அபிநயா 38926 வாக்குகள் பெற்றுள்ளார். காலை முதல் நீண்ட இலுபறிக்கு பின் பாமக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி, திமுக 10.422 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது

Tags:    

Similar News