மநீம தலைவர் கமலஹாசன் சந்தித்த திமுக வேட்பாளர்கள்

வட சென்னை கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை வேட்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2024-03-26 11:08 GMT
கமலை சந்தித்த திமுக வேட்பாளர்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன் , டாக்டர். கலாநிதி வீராச்சாமி , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.

இவர்களுடன், சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்களும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு , மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் அவர்களும், மாநில நிர்வாகிகளும் உடனிருந்தனர். தலைவர் கமலஹாசன் வேட்பாளர்கள் இருவரையும் தேர்தலில் வெற்றி பெற தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News