அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடிய திமுகவினர்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக சார்பில் வேப்பிலைப்பட்டி,தாளநத்தம் ,கடத்தூரில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

Update: 2024-04-14 06:57 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பிலைபட்டியில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மூத்த நிர்வாகிகள் தனபால் தமிழரசன் பரமசிவம் வசந்த் கணேசன் ஆதிமூலம் வேணுகோபால்,  உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் தாளநத்தம் பேருந்து நிலையத்திலும் கடத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News