தர்மபுரி நகர பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடிய திமுகவினர்
தர்மபுரி அரசு மருத்துவமனை இறக்க அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;
Update: 2024-04-14 15:39 GMT
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக கட்சி சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது மாவட்ட துணை தலைவர் ரேணுகா தேவி நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஜெகன் இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாவட்ட செயலாளர் குமார் கனகராஜ். ரவி . இளைஞர் அணி இணை அமைப்பாளர். அசோக் குமார்,மற்றும் நிர்வாகிகள் ,கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.