புதுக்கோட்டையில் குப்பை குளங்களால் மக்களுக்கு தொல்லை திமுக நகர மன்ற உறுப்பினர் புலம்பல்!
புதுக்கோட்டையில் குப்பை குளங்களால் மக்களுக்கு தொல்லை திமுக நகர மன்ற உறுப்பினர் புலம்பல்!
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட குளங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கலக்காமல் தடுத்து பராமரிக்க வேண்டும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற மாதாந்திர நகராட்சி கூட்டத்தில் நகர்மன்ற உறுபினர்கள் கோரிக்கை வைத்தனர் புதுக்கோட்டை நகராட்சியில் இன்று நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அப்போது 27வது நகர் மன்ற உறுப்பினர் மூர்த்தி என்பவர் பேசுகையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட குளங்கள் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக இருந்து வருகிறது எனவும் இந்த குளங்களை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கலந்து பொதுமக்கள் பயன்பாடில்லாமல் இருக்கின்றது எனவும் எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பிளாஸ்டிக் குப்பைகள் கலக்காமல் குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும்
மேலும் கடந்த சில தினங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது இதனை தடுக்க நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்