தி.மு.க. முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடப்பதை முன்னிட்டு தி.மு.க. முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2024-06-03 11:38 GMT

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடப்பதை முன்னிட்டு தி.மு.க. முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.


நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தி.மு.க. முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்தினர்.

அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தார். இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலந்து கொள்ளும் தி.மு.க. முகவர்கள் கலந்து கொண்டனர். இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக வாக்கு எண்ணிகையின் போது முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினர். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முதல் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் தி.மு.க. முகவர்கள் இருக்க வேண்டும். வாக்கு எண்ணுவதற்கு முன்பாக மின்னணு எந்திரங்கள் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக தபால் வாக்குகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News