சின்னசேலத்தில் தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

Update: 2023-11-26 07:09 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சின்னசேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் சந்திரன், துணைச் செயலாளர் கோமதி குமார், பிரதிநிதிகள் சண்முகம் முன்னிலை வகித்தனர்.அவைத் தலைவர் ராமசாமி வரவேற்றார்.வரும் டிசம்பர், 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாடு குறித்த விழிப்புணர்வு பைக் ஊர்வலம் இன்று சின்னசேலம் வருகிறது. வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம் நடக்கிறது. இதில், இளைஞரணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். நாளை 27ம் தேதி அமைச்சர் உதயநிதி பிறந்த நாளை‌ சிறப்பாக கொண்டாடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News