ராசிபுரத்தில் திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் மா. மதிவேந்தன் திறந்து வைத்தார்.
ராசிபுரத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு அமைச்சர் மா. மதிவேந்தன் திறந்து வைத்தார்.
By : King 24x7 Website
Update: 2024-03-31 13:30 GMT
பாராளுமன்றத் தேர்தல் தொடங்கி பல்வேறு கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சினர் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் வரை நிறைவடைந்து உள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் , மற்றும் சில கட்சிகளின் நிர்வாகிகள்லோடு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .மேலும் கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம், ஊழியர் கூட்டம், போன்றவற்றை நடத்தி வருகிறார்கள் திமுக சார்பில் விறுவிறுப்பாக ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முடித்துள்ளார்கள். மேலும் சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர் தலைமை வகித்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், ராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தொகுதி அலுவலகத்தை ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தேர்தல் பொறுப்பாளர் ஏ.கே.பாலசந்தர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, விசிக மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர் மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், நிர்வாகிகள் சுந்தரம், வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், கவுன்சிலர் லலிதா பாலு,நகர தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி, மாணிக்கம், வீரண்ணன், செட்டியார்,மற்றும் கொங்குநாடு மக்கள் கட்சி நிர்வாகிகள் சேகர், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மணிமாறன் ,மதிமுக நிர்வாகிகள் ஜோதிபாசு, மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஜெ. ஜெயபிரகாஷ், மாநில நிர்வாகி மருந்தாளுனர் ராஜு, சிவானந்தம், ராஜா, சண்முகம், ரமேஷ், சேகர், சுரேஷ், பூபதி, மற்றும் திமுக கவுன்சிலர்கள் விநாயகமூர்த்தி, சாரதி, பிரபு, சரவணன், சண்முகம், பிரபாகரன், நடராஜன், மற்றும் வார்டு செயலாளர்கள் ஏடிசி சக்திவேல், இளைஞர் அணி கார்த்தி, யோகா ஸ்டிக்கர்ஸ் ராஜா, மேலும் நகர, ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.